அமெரிக்க இராணுவ கப்பலை குறி வைத்து தாக்கிய ஈரான்: துபாயிலும் தாக்குதல்
துபாய் மற்றும் ஓமனில் உள்ள அமெரிக்க இலக்குகளை குறிவைத்து ஈரான் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
அமெரிக்க நிலைகளை குறிவைத்து தாக்குதல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் நடத்தி வரும் தொடர் ஏவுகணை தாக்குதல் காரணமாக பதற்றம் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் சனிக்கிழமை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் புதிதாக ஓமன் கடற்கரைக்கு அருகில் அமெரிக்க ராணுவ ஆதரவு கப்பல் ஒன்றை குறிவைத்து தாக்கி இருப்பதாக அறிவித்துள்ளனர்.

ஈரானிய ஊடகமான தஸ்னிம் நியூஸ் வெளியிட்ட செய்தியில், சலாலா துறைமுகத்துக்கு அருகே நிலைகொண்டிருந்த அமெரிக்க கப்பலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் இடைமறித்து தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் வெளிநாட்டு தொழிலாளர் ஒருவர் காயமடைந்து இருப்பதாகவும், துறைமுகத்தில் இருந்த சில பிரம்மாண்ட கிரேன்கள் சேதமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதை ஓமன் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
துபாயில் தாக்குதல்
அதைப்போல, துபாயில் அமெரிக்க ராணுவத்தினர் தங்கிருந்த இரண்டு முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் ட்ரோன் மற்றும் அதிநவீன ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பிட்ட இடத்தில் 500க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தங்கியிருந்ததாக ஈரான் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |