விமான போக்குவரத்து ஸ்தம்பிக்கும்... குவைத் விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ரேடார் அமைப்பு, இன்று நடைபெற்ற ட்ரோன் தாக்குதலில் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடுமையாக சேதம்
பல எண்ணிக்கையிலான ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளதாக தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், முக்கிய உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டுள்ளன.

இது பிராந்திய பதற்றங்களின் தீவிரமடைதலைக் குறிக்கிறது. ரேடார் அமைப்பு கடுமையாக சேதமடைந்ததால், செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதாகவே தெரிய வந்துள்ளது. இதனால் விமான போக்குவரத்து மொத்தமாக ஸ்தம்பிக்கும் வாய்ப்புள்ளது.
பதிலடி கொடுப்போம்
இந்த நிலையில், ஈரானிய ஜனாதிபதி பெஸெஷ்கியான் தனது சமூக ஊடகப் பக்கத்தில் அண்டை நாடுகளை மீண்டும் எச்சரித்துள்ளார்.
We have said many times that Iran doesn't carry out preemptive attacks, but we will retaliate strongly if our infrastructure or economic centers are targeted.
— Masoud Pezeshkian (@drpezeshkian) March 28, 2026
To the countries of the region:
If you want development and security, don't let our enemies run the war from your lands.
ஈரான் முற்காப்புத் தாக்குதல்களை மேற்கொள்வதில்லை என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம்; ஆனால், எங்கள் உள்கட்டமைப்போ அல்லது பொருளாதார மையங்களோ குறிவைக்கப்பட்டால், நாங்கள் கடுமையாகப் பதிலடி கொடுப்போம் என பதிவிட்டுள்ள அவர்,
இப்பிராந்திய நாடுகளுக்கு என குறிப்பிட்டு, நீங்கள் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் விரும்பினால், எங்கள் எதிரிகள் உங்கள் மண்ணிலிருந்து போரை நடத்த அனுமதிக்காதீர்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |