அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவிய ஈரான்: ஹார்முஸை கடந்த 3 எண்ணெய் கப்பல்கள்
ஈரான், அமெரிக்காவின் முற்றுகையை மீறி, ஹார்முஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் கப்பல்களை அனுப்பியுள்ளதாக்க தகவல்கள் வெளியாகியுள்ளன.
Deep Sea, Sonia I, Diona எனப்படும் கப்பல்கள், ஏப்ரல் 2, 8, 9 ஆகிய திகதிகளில் கார்க் தீவிலிருந்து (Kharg Island) சுமார் 5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றுள்ளன.
அமெரிக்கா, ஈரான் எண்ணெய் ஏற்றுமதியைத் தடுக்க, துறைமுகங்களில் அமெரிக்கா தனது கடற்படை மூலம் முற்றுகையிட்டுள்ளது.
ஏப்ரல் 10-ஆம் திகதி “Starla” கப்பல் சென்ற பிறகு, ஹார்முஸ் வழியாக எந்த ஈரான் எண்ணெய் கப்பலும் செல்லவில்லை என கூறப்படுகிறது.

இந்த மூன்று கப்பல்களும் AIS transponder-ஐ அணைத்ததால், நேரடி தரவு கிடைக்கவில்லை.
ஆனால், Kpler நிறுவனம் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி, அவை ஹார்முஸ் நீரிணையை கடந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த கப்பல்கள், கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூர் அருகே ship-to-ship transfer முறையில் எண்ணெயை மாற்றி, சீனாவுக்கு அனுப்பி வந்துள்ளன.
மார்ச் மாதத்தில், Deep Sea கப்பலின் எண்ணெய் Yantai துறைமுகத்துக்கு, Diona கப்பலின் எண்ணெய் Dongjiakou துறைமுகத்துக்கு சென்றது. Sonia I கப்பலின் எண்ணெய் Adeline G கப்பலுக்கு மாற்றப்பட்டது.
மார்ச் 1 முதல், சிங்கப்பூர் அருகே குறைந்தது 37 ஈரான் எண்ணெய் கப்பல்கள் 62.3 மில்லியன் பீப்பாய் எண்ணெயை மாற்றியுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் முற்றுகைக்கு எதிரான ஈரானின் சவாலாகவும், சீனாவுடன் அதன் வணிக உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#IranOil #StraitOfHormuz #USEconomy #ChinaTrade #OilExports #GlobalEnergy #MiddleEastCrisis