இறுதி கட்டத்தை எட்டிய ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தை: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அப்பாஸ் அராக்சி
ஈரான் - ஓமன் நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தை
ஹார்முஸ் விவகாரம், அமெரிக்கா - இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மற்றும் பிராந்திய பதற்றம் தொடர்பான ஈரான் - ஓமன் நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இருநாடுகளும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவது குறித்து அமைச்சர் அப்பாஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இருதரப்பு நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை
மேலும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பகேபி, இந்த பேச்சுவார்த்தை இருதரப்பு நலன் தொடர்புடையதாக மட்டுமே இருந்தது. இதில் வெளித்தரப்புகள் குறித்து எந்தவொரு பேச்சுக்கும் இடமில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
ஓமன் உடனான பரஸ்பர உடன்பாடு மற்றும் ஈரானுக்கு நல்லது ஏற்படும் ஒரு பாதையை தேடி இந்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பகேபி IRIB நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதில், ஹார்முஸ் விவகாரம் மற்றும் அதன் போக்குவரத்து உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டதா? என்பது குறித்து எந்தவொரு தெளிவான பதிலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |