ஹார்முஸ் நீரிணையில் புதிய சேவை கட்டணம்: நட்பு நாடுகளுக்கு சிறப்பு சலுகை வழங்கும் ஈரான்
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணம் செய்யும் கப்பல்களுக்கான புதிய சேவை கட்டணங்கள் விதிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் புதிய சேவை கட்டணம்
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக அமைதி மாநாட்டில் கலந்து கொண்ட பேசிய ஈரானிய தூதர் அப்துல்ரேசா ரஹ்மானி ஃபஸ்லி, ஹார்முஸ் ஜலசந்தியில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு புதிய சேவை கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கட்டணங்கள் வழக்கமான சுங்கக் கட்டணங்கள் அல்ல என்றும், இவை கடல்சார் பயணங்கள் செய்யும் கப்பல்களுக்கான சேவை செய்யும் பணிகளுக்கான சேவை கட்டணங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கட்டணங்கள் கடல் வழிப் பாதையின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்த பயன்படுத்தப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
நட்பு நாடுகளுக்கு சலுகை வழங்க திட்டம்
இந்த கட்டணத்தில் ஈரானுக்கு ஆதரவான நட்பு நாடுகளுக்கு சலுகை வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூதர் ஃபஸ்லி வழங்கிய தகவலில், இக்கட்டான சூழ்நிலையில் எங்களுடன் நின்ற நட்டு நாடுகளுக்கு நிச்சயம் இதில் சிறப்பு சலுகைகள் வழங்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஹார்முஸ் நீரிணை வழியாக வணிக கப்பல்கள் மட்டும் எந்தவொரு தடையும் இல்லாமல் 60 நாட்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இந்த அனுமதி இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ள நிலையில், அதன் பிறகு எந்த மாதிரியான நடைமுறை பின்பற்றப்படும் என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |