ஈரான் என்னை கொலை செய்ய சதி செய்கிறது: ஜனாதிபதி டிரம்ப் புலம்பல்
ஈரான் தன்னை கொலை செய்ய சதி செய்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வெடிக்கும் ஈரான் - அமெரிக்கா மோதல்
மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக 80க்கும் மேற்பட்ட ஈரானிய இராணுவ நிலைகளை குறிவைத்து அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல் நடத்தியது.
மேலும் ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்து செய்வதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.
Trump says the ceasefire between U.S. and Iran is over.
— Sky News (@SkyNews) July 8, 2026
"To me, I think it's over. I don't want to deal with them anymore; they're scum", the U.S. president says.
Live updates: https://t.co/l9KwsXPz0p pic.twitter.com/mqfE5qKOHe
அத்துடன் எதிர்வரும் நாட்களில் ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் பலமடங்கு அதிகரிக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
டிரம்பை கொல்ல ஈரான் சதி
இந்நிலையில் ஈரான் தன்னை கொலை செய்ய திட்டமிட்டு சதி செய்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சம் தெரிவித்துள்ளார்.
மேலும் “நான் ஈரானின் ஹிட் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பதாகவும், இதுவரை நான் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து இருக்கலாம் ஆனால் அது எப்போது இதுபோல நீடிக்காது என்றும்” கவலை தெரிவித்துள்ளார்.
துருக்கியில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டிற்கு இடையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

அப்போது, ஈரானின் பேச்சுவார்த்தை குழுவை கடுமையாக விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அவர்களை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. அவர்களுடன் நேரத்தை செலவிட்டு வீணடித்து விட்டேன். இனி அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்குவோம் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிகாரிகள் ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம், ஆனால் எனக்கு அதில் இனி நம்பிக்கை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |