குஜராத்தில் விபத்துக்குள்ளான அதிநவீன ஆளில்லா விமானம்: இந்திய கடற்படை தீவிர விசாரணை
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் குஜராத் அருகே விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான ஆளில்லா விமானம்
இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிநவீன Drishti-10 Starliner ரக ஆளில்லா விமானம் குஜராத்தில் போர்பந்தர் பகுதியில் அருகே பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது.
நேற்று வழக்கமான பயிற்சிக்காக போர்பந்தரில் உள்ள ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட Drishti-10 Starliner ரக ஆளில்லா விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரம்பூர் கிராமத்தின் நேஷ் பகுதிக்கு அருகே விழுந்து நொறுங்கியது.
Indian Navy's Drishti -10 UAV crashed in Porbandar
— Zorawar Singh (@ZoraSingh36079) July 8, 2026
pic.twitter.com/iwUf61IOUg
இந்த சம்பவத்தை தொடர்ந்து கடற்படை தொழில்நுட்ப வல்லுநர்கள், பொலிஸார், தீயணைப்பு படையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
மேலும் ட்ரோன் விழுந்த சத்தம் கேட்டு அப்பகுதியை சுற்றியுள்ள உள்ளூர் கிராம மக்களும் அப்பகுதியில் குவிந்தனர்.
விசாரணை தீவிரம்
இந்நிலையில் Drishti-10 Starliner ரக ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்திய கடற்படை அதிகாரிகள் விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து தீவிரமான விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
Indian Navy UAV 'Drishti-10' crashes near Porbandar city during training sortie; no casualties.
— News Arena India (@NewsArenaIndia) July 8, 2026
The UAV crash-landed in an open field at Dharampur village, around 6km from the coastal city in the Saurashtra region, Porbandar District Collector S D Dhanani said.
The cause of the… pic.twitter.com/tczGo932M7
இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதா? திடீர் வானிலை மாற்றம் விபத்துக்கு காரணமா? அல்லது வேறு ஏதேனும் வெளிப்புற காரணிகள் காரணமா என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Drishti-10 Starliner ரக ஆளில்லா விமானம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் உள்நாட்டு MALE(Medium Altitude Long Endurance) ஆளில்லா விமான வகை ட்ரோன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |