ஈரான் அரசாங்க எதிர்ப்பு போராட்டம்... கைதான இளைஞருக்கு தூக்குத் தண்டனை
ஈரானில் அரசாங்க எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கைதான நபர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரண தண்டனை
ஈரானில் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கல் தற்போது அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களாக நாடு முழுவதும் பரவியுள்ளது.

இந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட 26 வயது Erfan Soltani என இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் போவதாக தகவல் கசிந்துள்ளது.
டிசம்பர் 28 ஆம் திகதி முதல் ஈரானில் நடந்துவரும் போராட்டங்களில், இதுவரை 648 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைதானவர்க்ள் எண்ணிக்கை 10,000 கடந்துள்ளது. இந்த நிலையிலேயே Erfan Soltani கடவுளுக்கு எதிராக போரிட்டவர் என்ற குற்றச்சாட்டின் மீது கைது செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது.
தெஹ்ரானுக்கு அருகிலுள்ள ஃபார்டிஸ் நகரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சட்ட ஆலோசனை வழங்க அனுமதிக்கப்படவில்லை என்றும், தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு தன்னைத் தற்காத்துக் கொள்ள அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

தண்டிக்கும் வகையில்
மனித உரிமைகள் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், நேற்று அவருக்கு தனது குடும்பத்தினரைச் சந்திக்க வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்ததுதான் எர்ஃபானின் ஒரே ஒரு குற்றம் என்றும் குறிப்பிடுகின்றனர். டிசம்பர் 28 ஆம் திகதி தலைநகர் டெஹ்ரானில் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியதிலிருந்து, ஒரு போராட்டக்காரருக்கு வழங்கப்படும் முதல் மரண தண்டனை இதுவாகும்.

மேலும், ஆர்ப்பாட்டத்திற்கு தூண்டிய நபர்களையும் கைது செய்து தண்டிக்கும் வகையில் ஈரான் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை குறித்து ட்ரம்ப் நிர்வாகம் இன்று முடிவெடுக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் 186 நகரங்களில் 585 பகுதிகளில் பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரங்களில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு கொல்லப்பட்ட 648 பேர்களில் 8 சிறார்களும் அடக்கம் என்றே தகவல் வெளியாகியுள்ளது. கைதான 10,681 பேர்களில் 169 பேர்கள் இளையோர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |