அரசுக்கு எதிரான போராட்டம்... ஈரானில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,000
ஈரானில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டத்தில் இதுவரை கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,000 இருக்கலாம் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் ஊடுருவி
ஈரானிய பொதுமக்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்களில் தீவிரவாதிகள் ஊடுருவி, கொலைகளை முன்னெடுத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டிசம்பர் 28 ஆம் திகதி முதல் ஈரானில் நடந்துவரும் போராட்டங்களில், இதுவரை 10,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிகாரிகள் தரப்பு ஈரான் அதிகாரிகளைச் சந்திக்கக்கூடும் என்றும், தாம் ஈரானிய எதிர்க்கட்சியினருடன் தொடர்பில் இருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈரானிய அதிகாரி
அத்துடன் இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல் உட்பட பல வழிகளில் அதன் தலைவர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில், ஈரானில் 2,000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவலை எந்த அமைப்பும் இதுவரை உறுதி செய்யவில்லை.
கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரம் இருக்கலாம் என்றே மனித உரிமைகள் அமைப்பினர் சந்தேகம் தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது ஈரானிய அதிகாரி ஒருவரே, கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,000 என குறிப்பிட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஈரான் மீது இராணுவ நடவடிக்கை குறித்து ட்ரம்ப் முடிவெடுக்கக் கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அத்துடன், அமெரிக்க மக்கள் ஈரானில் இருந்து உடனடியாக வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |