8 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற இருக்கும் ஈரான்: ட்ரம்ப் வெளியிட்டுள்ள செய்தி
ஈரான் 8 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள செய்தி கவனம் ஈர்த்துவருகிறது.
8 பெண்களுக்கு மரண தண்டனை
சமூக ஆர்வலர் ஒருவர், சமூக ஊடகமான எக்ஸில், 8 பெண்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களுக்கு ஈரான் அரசு மரண தண்டனையை நிறைவேற்ற இருப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த இடுகையை மறுபகிர்வு செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
"To the Iranian leaders, who will soon be in negotiations with my representatives: I would greatly appreciate the release of these women. I am sure that they will respect the fact that you did so. Please do them no harm! Would be a great start to our negotiations!!!" - President… pic.twitter.com/pxU8xZFvAh
— The White House (@WhiteHouse) April 21, 2026
அந்த செய்தியில், ஈரான் தலைவர்களே, இந்தப் பெண்களை நீங்கள் விடுவித்தால் நல்லது. தயவு செய்து அவர்களுக்கு எந்த தீங்கும் செய்யவேண்டாம், அப்படி அவர்களை விடுவிப்பது நமது பேச்சுவார்த்தைகளுக்கு நல்ல துவக்கமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள அந்த பெண்கள், ஜனவரியில் ஈரான் அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்கள் என சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண்களில் இருவர் பதின்மவயதினர், அவர்களில் ஒருவருக்கு வெறும் 16 வயதுதான் ஆகிறது. இந்நிலையில், ஈரான் நீதித்துறை அலுவலக இணையதளத்தில், ட்ரம்பின் கூற்றுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலிச் செய்திகள் ட்ரம்பை தவறாக புரிந்துகொள்ள வைத்துள்ளதாகவும், மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ள பெண்களில் சிலர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், சிலர் மீதான குற்றச்சாட்டுகளுக்காக, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு சிறைத்தண்டனை மட்டுமே வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |