அணு ஆயுத தளங்களை மீண்டும் கட்டமைத்து வரும் ஈரான்- வெளியான ஆதாரங்கள்
ஈரான் அணு ஆயுதத் தளங்களை மீண்டும் கட்டமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் வெளியான செயற்கைக்கோள் படங்கள், ஈரான் தனது பார்சின் இராணுவ வளாகம் உள்ளிட்ட முக்கிய அணு மற்றும் ஏவுகணை தொடர்பான தளங்களில் மீண்டும் கட்டமைப்பு பணிகளைத் தொடங்கியிருப்பதை வெளிப்படுத்துகின்றன.
இந்த தளம், அணு ஆயுத ஆராய்ச்சியுடன் தொடர்புடையதாக நீண்ட காலமாக மேற்கத்திய உளவுத்துறைகளால் கருதப்படுகிறது.
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களில் சேதமடைந்த பகுதிகளில் குழிகள் மூடப்பட்டு, சுரங்கங்களில் வாகனங்கள் நுழைந்து வெளியேறும் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன.

இந்த குற்றச்சாட்டு உறுதியானால், இது ஈரான் ஜூன் 2026-ல் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் (MoU) கூறிய வாக்குறுதிகளுக்கு முரணான நடவடிக்கையாகும்.
ஒப்பந்தத்தின் படி, ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை நிறுத்தி, புதிய ஆயுதங்களை உருவாக்காமல் இருக்க வேண்டும். ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதால், அந்த ஒப்பந்தம் செயலிழந்திருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
500 கோடி பரிசு விழுந்த லொட்டரி சீட்டை குப்பையில் வீசிய கடைக்காரர்- அதிர்ஷ்டத்தை இழக்கவிருக்கும் பிரித்தானிய பெண்

செயற்கைக்கோள் படங்களில், இஸ்பஹான், ஃபோர்டோ, நடான்ஸ் போன்ற முக்கிய அணு வளாகங்களில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை. ஆனால், டப்ரிஸ் மற்றும் கெர்மன்ஷா அருகிலுள்ள ஏவுகணை தளங்களில் சுரங்கங்கள் மற்றும் சேமிப்பு வசதிகள் மீண்டும் சீரமைக்கப்படுகின்றன.
இந்த நடவடிக்கைகள், ஈரான் தனது முக்கிய இராணுவ மற்றும் மூலோபாய வசதிகளை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சி செய்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |