பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் நாடுகளிலிருந்து தூதர்களை திரும்ப பெற்ற ஈரான்
ஈரான் தற்காலிகமாக தங்களது பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜேர்மன் தூதர்களை திரும்ப அழைத்துள்ளது.
தூதர்களை திரும்ப அழைத்த ஈரான்
சனிக்கிழமை ஈரான் அரசாங்கம் பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜேர்மன் ஆகிய முக்கிய ஐரோப்பிய நாடுகளில் உள்ள தங்கள் நாட்டு தூதர்களை தற்காலிகமாக திரும்ப அழைத்து இருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
ஈரான் அரசு சொந்தமான IRNA வெளியிட்ட தகவலில் இந்த ராஜதந்திர நடவடிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரான் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அந்நாட்டின் அணுசக்தி திட்டத்திற்கு எதிரான தடைகளை தடுப்பதற்கு எதிரான முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பான சர்வதேச தடைகள் மீண்டும் அமுலுக்கு வரவுள்ள நிலையில், ஈரான் அதற்கான எதிர்வினையின் ஒரு பகுதியாக தூதர்களை திரும்ப பெறும் முடிவை அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |