ஈரான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய 2 பிரான்ஸ் நாட்டவர்: ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வாழ்த்து
ஈரான் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பிரான்ஸ் நாட்டினர் இருவர் விடுவிக்கப்பட்டு தற்போது தாய் நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பிய பிரான்ஸ் நாட்டினர்
கடந்த இரண்டு வருடங்களாக ஈரானின் வடக்கு கிழக்கு நகரமான மஷாத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பெர்னார்ட் ஃபெலன்(Bernard Phelan, 65) மற்றும் பெஞ்சமின் பிரையர்(Benjamin Brière, 37) ஆகிய இரண்டு பிரான்ஸ் நாட்டவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பி இருப்பதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
விடுவிக்கப்பட்ட அவர்கள் உடனடியாக சிறப்பு விமானங்கள் மூலம் பாரிஸுக்கு அழைத்து வரப்பட்டு, தலைநகரின் Le Bourget விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டனர்.
Family handout via AFP
ஈரானில் சிறையில் அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிராக இருவரும் உண்ணாவிரதத்தில் இருந்தால், அவர்கள் உடல்நிலை குறித்த கவலைகள் அவர்களது குடும்பங்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டவர் இருவர் ஈரானில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இறுதியில் சுதந்திரம், பெர்னார்ட் ஃபெலன் மற்றும் பெஞ்சமின் பிரையர் ஆகிய இருவரும் தற்போது அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைய முடியும். இது மிகப்பெரிய ஆறுதல்" என்று தெரிவித்து இருந்தார்.
Stephane de Sakutin/AFP
இதற்கிடையில், இஸ்லாமிய குடியரசால் சிறை வைக்கப்பட்டு இருக்கும் வெளிநாட்டினர்களை விடுவிப்பது தொடர்பாக பாரிஸ் தொடர்ந்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சிறை வைக்கப்பட்ட காரணம்
பெர்னார்ட் ஃபெலன்(65) பிரான்ஸ் நாட்டவர் மட்டும் இன்றி, அவர் ஐரிஸ் குடியுரிமையும் கொண்டவர், பாரிஸை தளமாக கொண்ட பயண ஆலோசகரான இவர், அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் கடந்த காலத்தில் ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில், மிகவும் உணர்ச்சிமிக்க புகைப்படங்களை பிரித்தானிய ஊடகத்திற்கு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு ஆறரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
AFP PHOTO/BRIERE FAMILY
பெஞ்சமின் பிரையர்(37) மே 2020 ஆண்டு ஈரானுக்கு பயணம் செய்த போது முதன் முதலில் கைது செய்யப்பட்டார், இவர் மீது நாட்டை உளவு பார்த்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து பெஞ்சமின் பிரையர் மற்றும் பெர்னார்ட் ஃபெலன் ஆகியோர் சிறைக்குள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது இருந்தது குறிப்பிடத்தக்கது.
Les deux otages français libérés Benjamin Brière et Bernard Phelan aujourd’hui à Machhad juste avant leur départ vers la France. pic.twitter.com/E4rPREKdT7
— lettres de Teheran (@LettresTeheran) May 12, 2023