சிதைக்கப்பட்ட ஈரான் உச்ச தலைவரின் இல்லம்: உட்புற காட்சிகளை முதல்முறையாக வெளியிட்ட அரசு ஊடகம்
மறைந்த ஈரானிய உச்ச தலைவர் காமேனியின் இல்லம் சிதைக்கப்பட்டது தொடர்பான முதல் காட்சிகளை ஈரானிய தரப்பு வெளியிட்டுள்ளது.
உச்ச தலைவரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்
கடந்த பிப்ரவரி 28ம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு ஏவுகணை தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இல்லம் முற்றிலுமாக சிதைக்கப்பட்டது.
இதில், 86 வயது ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும், குறிப்பாக அவரது 14 மாதக் பேத்தியும் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
Iranian state media has released what it calls the first footage showing damage to the late Supreme Leader Ali Khamenei’s compound in Tehran. Khamenei was killed on the first day of the US-Israeli war on Iran. The video was released to coincide with his burial. pic.twitter.com/2U7TcY7hd5
— Al Jazeera English (@AJEnglish) July 9, 2026
மேலும் இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்ததாக சொல்லப்படும் அவரது மகன் முஜ்தபா அலி காமேனி தற்போது ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிதைக்கப்பட்ட உச்ச தலைவரின் இல்லம்
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் சிதைக்கப்பட்ட ஈரானிய உச்ச தலைவர் காமேனியின் இல்லத்தின் உட்புறக் காட்சிகளை அந்நாட்டு அரசு ஊடகம் வியாழக்கிழமை முதல் முறையாக வெளியிட்டுள்ளது.
35 நொடிகள் கொண்ட இந்த வீடியோவில், கட்டிடத்தின் பெரும் பகுதி இடிந்து தரைமட்டமாகி இருப்பதும், வளைந்த இரும்புத் தூண்கள் மற்றும் குவியலாக கிடக்கும் இடிபாடுகள் ஆகியவை தாக்குதலின் வீரியத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

மேலும் காமேனி முன்னெடுக்கும் முக்கிய கூட்டங்கள் நடைபெறும் இமாம் கோமேனி ஹுசைனியா மண்டலத்தின் அவல நிலையும் இந்த வீடியோ வெளிகாட்டியுள்ளது.
இந்த வீடியோவானது, மறைந்த தலைவர் காமேனியின் ஒருவார கால இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |