ஹார்மூஸ் நீரிணையை கடந்த 26 கப்பல்கள்: ஈரான் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஹார்மூஸ் நீரிணை வழியாக 26 சரக்கு கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து சென்று இருப்பதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
ஹார்மூஸ் நீரிணையை கடந்த கப்பல்கள்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில் ஹார்மூஸ் நீரிணை வழியாக கடந்த 24 மணி நேரத்தில் 26 கப்பல்கள் 26 சரக்கு கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து சென்று இருப்பதாக ஈரானின் புரட்சிகர காவல் படை உறுதிப்படுத்தியுள்ளது.

எண்ணெய் டேங்கர்கள், வணிகக் கொள்கலன் கப்பல்கள் என 26 கப்பல்கள் ஈரானின் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக ஹார்முஸை கடந்து சென்று இருப்பதாக புதன்கிழமை ஈரானிய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கடல் வழி போக்குவரத்தானது ஈரானிய கடற்படையின் நேரடி கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு கீழ் நடைபெற்றதாக ஈரான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எரிசக்தி மற்றும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமாக கருதப்படும் ஹார்முஸ் கடந்த பிப்ரவரி 28ம் திகதி ஈரானுக்கு எதிராக அமெரிக்க படைகள் தாக்குதலை தொடங்கிய பிறகு அடைக்கப்பட்டது.

இது சர்வதேச அளவில் எரிசக்தி துறையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஹார்மூஸ் நீரிணையை 26 கப்பல்கள் கடந்து சென்று இருப்பது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |