செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பாதுகாக்க தயார்: ஈரானிடம் புடின் வாக்குறுதி
ஈரான் ரஷ்யா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஈரான் - ரஷ்யா அணுசக்தி ஒத்துழைப்பு
இரண்டாம் உலகப் போரின் வெற்றி தினக் கொண்டாட்டம் சனிக்கிழமை மாஸ்கோவில் நடைபெற்றது, இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஈரான் உடனான ரஷ்யாவின் ஆழமான உறவு குறித்து பேசினார்.
அணுசக்தி விவகாரங்களில் ஈரான் தங்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து இருப்பதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு ஆதரவு
அதில், ஈரான் - ரஷ்யா ஆகிய இருநாடுகளும் தங்களுக்குள் கொண்டுள்ள நம்பிக்கை தற்செயலானது அல்ல. பல தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் இருநாடுகளின் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப பட்டுள்ளது.

முதலாவது, இரு தரப்பிலும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரஷ்யா மீறியது இல்லை. மற்றொன்று அமைதி நோக்கங்களுக்காக ஈரான் மேற்கொண்டு வரும் அணுசக்தி திட்டங்களுக்கு ரஷ்யா அளித்து வரும் ஆதரவு என புடின் சுட்டிக்காட்டினார்.
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பாதுகாக்க தயார்
மேலும் சர்வதேச அளவிலான பதற்றத்தை குறைக்க ஈரானில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பொறுப்பேற்று பாதுகாக்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஈரான் தொடர்புடைய அனைத்து மோதல்களும் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |