"இஸ்ரேலுக்கு மரணம்" என்று முழங்கியதா ஈரான் நாடாளுமன்றம்? அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
ஈரான் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்து இருக்கும் நிலையில், "இஸ்ரேலுக்கு மரணம்!" ஈரான் நாடாளுமன்றம் முழக்கமிட்டுள்ளது.
டமாஸ்கஸ் தாக்குதலுக்கு பதிலடி
கடந்த ஏப்ரல் 1ம் திகதி டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, சனிக்கிழமை மாலை இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியுள்ளது.
இந்த தாக்குதலில், ஈரான் ராணுவம் கிட்டத்தட்ட 200 ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனை இஸ்ரேலிய ஏவுகணை தடுப்பு அமைப்புகள் (Iron Dome) மற்றும் அமெரிக்க ஏவுகணை தடுப்பு அமைப்புகள் பெரும்பாலான ராக்கெட்டுகளை தடுத்து நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விரைவில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா மற்றும் பல நாடுகள் ஈரானின் தாக்குதலை எதிர்த்து இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஈரான் நாடாளுமன்றத்தில் முழக்கம், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
இந்நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பிறகு ஈரான் நாடாளுமன்றம் "இஸ்ரேலுக்கு மரணம்!" என்று முழக்கமிட்டது என்ற தவறான வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
⚡️ Iran's parliament chants "Death to Israel!"
— NEXTA (@nexta_tv) April 14, 2024
Iran has notified the U.S. through Switzerland that their bases will become a military target if Washington supports an Israeli retaliatory strike. pic.twitter.com/9SgzjrDcuy
ஆனால் இந்த வீடியோ 2020ம் ஆண்டு ஈரான் நாடாளுமன்றம் "அமெரிக்காவுக்கு மரணம்" என்று முழக்கமிட்ட பழைய வீடியோ ஆகும்.
அதே நேரத்தில், இஸ்ரேலின் பதிலடி தாக்குதலை வாஷிங்டன் ஆதரித்தால், தங்கள் தளங்கள் இராணுவ இலக்காக மாறும் என்று சுவிட்சர்லாந்து மூலம் அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |