ஈரானை பணிய வைக்க டிரம்ப் முயற்சி: அமெரிக்காவுடன் சண்டைக்கு தயாரான ஈரான்
அமெரிக்கா - ஈரான் இடையிலான இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை முறிவடையும் அபாயத்தில் உள்ளது.
அமெரிக்கா - ஈரான் 2ம் கட்ட பேச்சுவார்த்தை
அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் ஏப்ரல் 22ம் திகதி முடிவுக்கு வரவுள்ள நிலையில் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் இழுபறியை சந்தித்து வருகின்றன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் கடல் முற்றுகை பதற்றம் மற்றும் இராணுவ பதற்றங்களால் செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகியுள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் பாகிஸ்தானுக்கு கிளம்பி விட்டதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்து இருந்தாலும், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல் படி, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வேன்ஸ் இன்னும் தனது பயணத்தை தொடங்க வில்லை என தெரியவந்துள்ளது.
ரகசிய வியூகங்கள் தயார்
பேச்சுவார்த்தை தொடர்பான குழப்பங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கருத்துக்கள் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.
ترامپ با اعمال محاصره و نقض آتشبس میخواهد تا به خیال خود این میز مذاکره را به میز تسلیم تبدیل کند یا جنگافروزی مجدد را موجّه سازد.
— محمدباقر قالیباف | MB Ghalibaf (@mb_ghalibaf) April 20, 2026
مذاکره زیر سایهٔ تهدید را نمیپذیریم و در دو هفتهٔ اخیر برای رو کردن کارتهای جدید در میدان نبرد آماده شدهایم.
இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், என்னுடைய கற்பனையில், அமெரிக்கா இந்த பேச்சுவார்த்தையை ஈரானை பணிய வைக்கவோ அல்லது மீண்டும் போர் தாக்குதலை தொடங்குவதற்கான காரணத்தை பெறவோ பயன்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
அமைதி. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், ஈரான் போருக்கு தயார் என்றும், கடந்த இரண்டு வார போர் நிறுத்தத்தின் போது சண்டைக்கான புதிய ரகசிய வியூகங்களை ஈரான் தயார் செய்து இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |