நாங்களும் தயார்... ட்ரம்புக்கு ஈரான் தரப்பு பதிலடி
ஈரானை பூமியிலேயே இராதபடிக்கு காணாமல் போகச் செய்துவிடுவோம் என மிரட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு ஈரான் தரப்பு தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ட்ரம்புக்கு ஈரான் தரப்பு பதிலடி
ஈரானில், ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடி வருவோருக்கு எதிராக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்புக்கு ஈரான் தரப்பிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, தனக்கு அப்படி ஏதாவது நடக்குமானால், ஈரான் பூமியின் முகத்திலிருந்தே காணாமல் போய்விடும் என எச்சரித்துள்ளார் ட்ரம்ப்.
இந்நிலையில், ட்ரம்பின் எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் தரப்பைச் சேர்ந்த Dr Abdul Majid Hakeem Ilahi என்பவர், தனது நாட்டுக்கெதிரான இத்தகைய கருத்துக்கள் புதிதல்ல என்றும், ஈரான் எதற்கும் தயாராகவே உள்ளது என்றும் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |