7 நிபந்தனைகளுடன் அமெரிக்காவிற்கு அணு முன்மொழிவு அனுப்பிய ஈரான்
Iran Sends Nuclear Proposal To US With 7 Terms: 7 நிபந்தனைகளுடன் அமெரிக்காவிற்கு அணு முன்மொழிவை ஈரான் அனுப்பியுள்ளது.
அமெரிக்காவிற்கு அணு முன்மொழிவு அனுப்பிய ஈரான்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈரானை முழுமையாக 'அழித்துவிடுவோம்' என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஈரான் தனது அணுசக்தி தொடர்பான புதிய முன்மொழிவை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது.

7 முக்கிய நிபந்தனைகள்
இந்த முன்மொழிவு கத்தார் நாட்டின் வழியாக அனுப்பப்பட்டதாகவும், அதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன் அமெரிக்கா 7 முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராய்ட்டர்ஸிடம் பேசிய ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர், இந்த முன்மொழிவை அமெரிக்கா தற்போது பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். ஆனால் அதற்கு மேலான விவரங்களை அவர் வெளியிடவில்லை.
இதற்கு முன்னர் ஈரானின் தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய அதிகாரியான மொஹ்சென் ரெசாயி, "அமெரிக்காவிற்கு ஏழு நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை நிறைவேற்றப்படாத வரை ஹார்முஸ் நீரிணையை திறக்கவோ அல்லது புதிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவோ மாட்டோம்" என்று தெரிவித்திருந்தார்.
ஈரான் அதிகாரப்பூர்வமாக தனது ஏழு நிபந்தனைகளின் பட்டியலை வெளியிடவில்லை. இருப்பினும், வெளிவந்த தகவல்களின்படி போர் நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்துதல், ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குதல், பொருளாதார தடைகளை ரத்து செய்தல், முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளை விடுவித்தல், பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பை குறைத்தல், போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் ஈரான் நிலப்பரப்பின் மீது தாக்குதல்களை நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
ரூ.1 கோடியில் உருவான இராவணன் சிம்மாசனம்: 24 காரட் தங்க அலங்காரம் - ராமாயணம் படக்குழுவின் பிரம்மாண்ட சாதனை
மறுபுறம், அணுசக்தி விவகாரம் எந்தவொரு தொடக்க பேச்சுவார்த்தையிலும் முக்கிய இடம் பெற வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
ஈரான்-அமெரிக்கா இடையிலான போர் மீண்டும் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், இரு தரப்புக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்க சர்வதேச மத்தியஸ்தர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரான் தாக்கல் செய்துள்ள இந்த புதிய முன்மொழிவு, மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றத்திற்கு தீர்வு காணும் முயற்சியில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |