விண்ணை நோக்கி செல்லும் விலங்குகள்; ஈரானில் இருந்து ஏவப்பட்ட விண்கலம்
ஈரான் நாட்டில் இருந்து விலங்குகளைக் கொண்ட ஒரு விண்கலமானது விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.
விலங்குகளை விண்ணுக்கு அனுப்பு ஈரான்
மனிதர்களை கொண்ட விண்கலத்தை விண்ணிற்கு அனுப்ப வேண்டும் என்ற முயற்சியில் இருந்த ஈரான், தற்போது முதற் கட்டமாக விலங்குகளைக் கொண்ட விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.
پرتاب کپسول زیستی از زاویهای جدید ✌?? pic.twitter.com/xskDJ3sLtL
— Hossein Dalirian (@HosseinDalirian) December 6, 2023
இந்த விண்கலமானது விண்வெளியின் சுற்றுவட்டப்பாதையில் 130 கிலோமீட்டர் தொலைவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அனுப்பியுள்ள இந்த விண்கலமானது 500 கிலோ எடையை கொண்டுள்ளதாகவும், இந்த விண்கலத்தில் எந்த வகையான விலங்குகளும் எத்தனை விலங்குகளும் அனுப்பப்பட்டுள்ள என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும் கூடிய விரைவில் மனிதர்களைக் கொண்ட விண்கலம் விண்ணை நோக்கி வெற்றிகரமாக ஏவப்படும் என ஈரான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |