அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தையை தொடங்க 5 நிபந்தனைகளை விதித்த ஈரான்
அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தையை தொடங்க ஈரான் 5 நிபந்தனைகளை விதித்துள்ளது.
5 நிபந்தனை விதித்த ஈரான்
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28 அன்று தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தி, ஹார்முஸ் நீரிணையை மூடியது.
இதனையடுத்து, பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் கீழ் ஏப்ரல் 8 அன்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

ஆனால், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் ஒரு நீடித்த உடன்படிக்கையை ஏற்படுத்தாத நிலையில், போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், நம்பிக்கையை வளர்க்கும் 5 நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், ஈரான் அமெரிக்காவுடனான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈரான் ஈடுபடாது என தகவல் வெளியாகியுள்ளது.
அதில், அனைத்து முனைகளிலும் குறிப்பாக லெபனானில் போரை முடிவுக்கு கொண்டு வருவது, ஈரான் மீதான தடைகளை நீக்குவது, முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது, போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான ஈரானின் இறையாண்மை உரிமைகளை அங்கீகரிப்பது ஆகியவை உள்ளது.
அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தையை தொடங்குவதற்குத் தேவையான குறைந்தபட்ச உத்தரவாதங்களாக இந்த நிபந்தனைகளை ஈரான் கருதுகிறது.
போர் நிறுத்ததிற்கு, அரபிக்கடலிலும் ஓமான் வளைகுடாவிலும் அமெரிக்கக் கடற்படை முற்றுகை தொடர்வது, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் மீதான அவநம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக ஈரான் பாகிஸ்தானிய மத்தியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |