டிரம்பின் முட்டாள்தனம்: அமெரிக்காவின் F-35 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்
அமெரிக்காவுக்கு சொந்தமான F-35 ரக போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது.
ஈரான் - அமெரிக்கா மோதல்
வெள்ளிக்கிழமை மத்திய ஈரான் பகுதியில் இரவு நேர தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்காவின் F-35 ரக போர் விமானத்தை ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது.
ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை, புதிய அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பின் உதவியுடன் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் F-35 ரக போர் விமானத்தை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
انهدام دومین فروند از جنگنده فوق پیشرفته اف۳۵ آمریکایی در آسمان مرکزی ایران
— خبرگزاری تسنیم (@Tasnimnews_Fa) April 3, 2026
روابط عمومی سپاه:
بهدلیل متلاشی شدن جنگنده از سرنوشت خلبان خبری در دست نیست
طی دوازده ساعت گذشته، این دومین جنگندهای است که توسط پدافند سپاه منهدم گردیده است#ایران_قوی pic.twitter.com/0sHEcDKjoE
மேலும் F-35 ரக போர் விமானத்தை செலுத்திய விமானியின் நிலைமை குறித்து தகவல் எதுவுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முட்டாள்தனங்களுக்கு இதுதான் தங்களுடைய முதல் பதில் என்று IRGC தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |