தலைநகரில் பாலிஸ்டிக் ஏவுகணையை காட்சிப்படுத்திய ஈரான்., அமெரிக்காவிற்கு நேரடி எச்சரிக்கை
ஈரான் புரட்சிகர காவல்படை (Revolutionary Guard) ஏப்ரல் 22, 2026 அன்று தெஹ்ரானில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை காட்சிப்படுத்தியது.
அமெரிக்காவுடன் நடைபெற்று வந்த சமாதான பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானில் முறிந்த நிலையில், ஈரான் தனது இராணுவ சக்தியை வெளிப்படுத்தும் நடவடிக்கையாக இதனைச் செய்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானுடன் நடந்து வரும் தற்காலிக போர் நிறுத்தத்தை (ceasefire) நீட்டித்தாலும், “ஈரான் ஒருமித்த முன்மொழிவை வழங்கும் வரை” கடற்படை முற்றுகை நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின் போது, ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா மேற்கொண்ட கடற்படை முற்றுகை காரணமாக, ஈரான் “நீரிணையை மூடுகிறோம்” என அறிவித்தது. இதனால் உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.

மேலும், அமெரிக்க கடற்படை ஈரான் கப்பல்களை தடுத்து நிறுத்தியதாகவும், சில கப்பல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்நிலையில், ஈரான் தனது இராணுவ சக்தியை வெளிப்படுத்தும் வகையில் பாலிஸ்டிக் ஏவுகணையை பொதுமக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தியுள்ளது. இது, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு நேரடி எச்சரிக்கை எனக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#IranMissile #TehranRally #USIranTensions #HormuzStrait #Ceasefire #WorldNews #MiddleEast