இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய பதிலடி தாக்குதல்: வெளியான அவசர கால எச்சரிக்கைகள்
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி இருப்பதை இஸ்ரேலிய பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்
இன்று ஈரானை குறிவைத்து இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதலை தொடங்கியுள்ளது. இதில் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு வருவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
OPERATION EPIC FURY 🇺🇸
— Department of War 🇺🇸 (@DeptofWar) February 28, 2026
ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் பதிலடி தாக்குதல்
இந்நிலையில் ஈரானில் இருந்து இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டு இருப்பதை இஸ்ரேலிய பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது.
அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்ட தகவலில், வடக்கு இஸ்ரேலின் சில பகுதிகளில் வெடிச் சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரானின் தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலிய விமானப்படை முழுவீச்சில் களமிறக்கப்பட்டு இருப்பதுடன் எதிரிகளின் ஏவுகணைகளை அழிப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.
A short while ago, the IDF identified missiles launched from Iran toward Israel.
— Israel Defense Forces (@IDF) February 28, 2026
Defensive systems are operating to intercept the threat. In the past few minutes, the Home Front Command has sent a precautionary directive directly to mobile phones in the relevant areas.
அவசரகால அறிவிப்புகள்
மேலும் இஸ்ரேலிய மக்களுக்கான அவசர கால எச்சரிக்கை அறிவிப்புகள் தொலைபேசி வழியாக வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் வான் எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்படும் போது உடனடியாக பாதுகாப்பு அறைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அமைதியை கடைபிடிக்குமாறும், ராணுவத்தினரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை உடனுக்குடன் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |