வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்., பதற்றம் அதிகரிப்பு
ஈரான், அமெரிக்காவின் விமானத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, வளைகுடா நாடுகளான கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன் மற்றும் குவைத் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
கத்தாரின் தலைநகர் தோஹாவில் இரண்டு கட்டமாக தாக்குதல் நடந்தது. பலத்த வெடிப்புகள் நகரம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தின.
கத்தார் பாதுகாப்புத் துறை, “பல ஏவுகணைகளை வெற்றிகரமாக தடுத்தோம்” என்று அறிவித்தது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள் தங்குமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதே நேரத்தில், அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் தங்கள் வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை இயக்கி, ஈரான் ஏவுகணைகளை தடுத்ததாக அறிவித்துள்ளன.
ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC), கத்தாரில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய Al-Udeid விமானத் தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறியது. ஆனால் கத்தார், அந்த ஏவுகணைகள் தடுக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியது.
மேலும், ஜோர்டான் மற்றும் ஓமன் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
BREAKING: Iran has started launching a heavy wave of ballistic missile and drone attacks against U.S. and allied military sites across the Gulf in retaliation for today's U.S. strikes on Iranian territory.
— The Hormuz Report (@HormuzReport) July 12, 2026
Jordan: Iran reportedly fired 12 ballistic missiles toward Muwaffaq Salti… pic.twitter.com/6gqA2KNaDk
இந்த தாக்குதலுக்கு முன்னதாக, அமெரிக்கா, ஹார்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, ஈரானில் 140 இடங்களில் விமானத் தாக்குதல் நடத்தியது.
இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த சம்பவங்கள், அமெரிக்கா-ஈரான் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதையும், வளைகுடா நாடுகள் கடுமையான பாதுகாப்பு நிலைக்கு சென்றுள்ளதையும் காட்டுகின்றன.
500 கோடி பரிசு விழுந்த லொட்டரி சீட்டை குப்பையில் வீசிய கடைக்காரர்- அதிர்ஷ்டத்தை இழக்கவிருக்கும் பிரித்தானிய பெண்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |