பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி: வெளியான முதல் வீடியோ
Iran supreme leader mojtaba khamenei rare video: ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் தொடங்கிய பிறகான ஈரானிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி முதல் வீடியோ காட்சியானது வெளியாகியுள்ளது.
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி
பிப்ரவரி 28ம் திகதி அமெரிக்க முன்னெடுத்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா காமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Iran’s Supreme Leader Mojtaba Khamenei in FIRST-TIME-SEEN footage
— RT Intl (@RT_on_X) August 24, 2026
Released publicly for the first time by Iranian media, footage shows him presiding over a religious academic study session pic.twitter.com/iIIl0pLAgS
ஆனால் அவர் பதவியேற்றதில் இருந்து இதுவரை வெளியுலகிற்கு தலை காட்டாமல் இருந்து வந்தார். இதையடுத்து அமெரிக்க நடத்திய வான்வழித் தாக்குதலில் மொஜ்தபா காமேனிக்கும் மிகுந்த உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அவரது முகம் மற்றும் சில உடல் பாகங்கள் சிதைந்து இருக்கலாம் என்றும் பல்வேறு கருத்துகள் வெளிவந்தன.
கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவரும், தன்னுடைய தந்தையுமான அயதுல்லா அலி காமேனியின் இறுதி சடங்கிற்கு கூட மொஜ்தபா காமேனி பங்கேற்காதது பொதுவெளியில் பரவிய கருத்துகளுக்கு வலு சேர்த்து வந்தது.
வெளியான புதிய வீடியோ ஆதாரம்
இந்நிலையில் பல மாதங்கள் பரவி வந்த வதந்திகள் மற்றும் ரகசியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் புதிய வீடியோ ஒன்றை ஈரானிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.
அவர் உச்ச தலைவராக பதவியேற்ற பிறகு, அவரது குரல் பொதுவெளியில் கேட்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

அந்த வீடியோவில் 56 வயதான மொஜ்தபா காமேனி, மத ரீதியான கல்வி ஆராய்ச்சி அமர்வுக்கு தலைமை தாங்குவது பதிவாகியுள்ளது. ஆனால் அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த காலம் குறிப்பிடப்படவில்லை.
மேலும் அதில் மாணவர் ஒருவரின் ஆய்வறிக்கையை கவனமாக கேட்டறிந்து அதனை குற்றமற்றது (Flawless)என்று பாராட்டியதோடு 20-க்கு 19.5 மதிப்பெண்கள் வழங்கி மதிப்பிடுகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |