3 முக்கிய கடல் பகுதிகளிலும் கப்பல்கள் தடுக்கப்படும் - ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால், பாரசீக வளைகுடா, ஓமன் கடல் மற்றும் செங்கடல் பகுதிகளில் கப்பல்கள் இயங்க முடியாது என ஈரான் எச்சரித்துள்ளது.
ஹார்மோஸை முற்றுகையிட்ட அமெரிக்கா
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானில் இருந்து ஹார்மோஸ் நீரிணை வழியாக வெளியேறும் கப்பல்களை தடுப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முதல் 24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் எங்களின் முற்றுகையைத் தாண்டிச் செல்லவில்லை, ஓமான் வளைகுடாவில் 6 வர்த்தகக் கப்பல்கள் திரும்பிச் செல்ல நிர்பந்திக்கப்பட்டன என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆயுதப் படைகளை ஒருங்கிணைக்கும் ஈரானின் மிக உயர்ந்த செயல்பாட்டுக் கட்டளையகமான, கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் தளபதி அலி அப்தொல்லாஹி அறிக்கை ஒன்றை ஈரானிய அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
பாரசீக வளைகுடா, ஓமன் கடல், செங்கடல்
அமெரிக்கா தனது முற்றுகையைத் தொடர்ந்தால் மற்றும் ஈரானின் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்களுக்குப் பாதுகாப்பின்மையை உருவாக்கினால், அது போர் நிறுத்த மீறலுக்கு ஒரு முன்னுரையாக அமையும்.
இதன் விளைவாக, பாரசீக வளைகுடா, ஓமன் கடல் மற்றும் செங்கடல் ஆகிய பகுதிகளில் எந்தவொரு ஏற்றுமதி அல்லது இறக்குமதியும் தொடர ஈரானின் ஆயுதப் படைகள் அனுமதிக்காது என்று எச்சரித்துள்ளார்.

செங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஈரானின் ஆதரவு அமைப்பான ஏமனில் உள்ள ஹௌதி செங்கடலில் இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |