அமெரிக்கா - ஈரான் புதிய ஒப்பந்தம்: பழைய நிலைக்கு திரும்புமா ஹார்முஸ்?
ஈரான் அமெரிக்கா இடையில் ஏற்பட இருக்கும் புதிய ஒப்பந்தம் ஹார்முஸ் ஜலசந்தியின் போக்குவரத்தை பழைய நிலைக்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய நிலைக்கு திரும்புமா ஹார்முஸ்?
அமெரிக்கா - ஈரான் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தான 30 நாட்களுக்குள் ஹார்முஸ் ஜலசந்தியின் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அல் அரேபியா தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த தகவலில், ஈரான்-அமெரிக்கா இடையிலான இறுதி புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிறகு, 30 நாட்களுக்கு ஹார்முஸ் கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் என்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
இருதரப்பிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் வரைவு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஆக்ஸியோஸ்(Axios) ஊடகம் ஒப்பந்தத்தின் சில முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டியுள்ளது.
அதில், ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும், இதன் மூலம் ஈரான் தங்களது கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி வர்த்தகத்தை மீண்டும் தொடங்க முடியும்.
அதைப்போல ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதுடன் அப்பகுதியில் கப்பல் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கண்ணிவெடிகள் மற்றும் பிற கடல்சார் தடைகளை அகற்றுவது குறித்தும் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |