ஈரான் - இஸ்ரேலின் இராணுவ பலம் என்ன? எந்த நாட்டிடம் ஆயுதங்கள் அதிகம்?
ஈரான் மற்றும் இஸ்ரேல் இராணுவத்தின் வலிமை என்ன, எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைப் பார்க்கலாம்.
சிரியாவில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது.
இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் வெடிக்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேலின் இராணுவ பலத்தை தெரிந்து கொள்வோம்.
ஈரான் புவியியல் ரீதியாக இஸ்ரேலை விட பாரியது. ஈரானின் மக்கள் தொகை சுமார் 9 கோடி. இஸ்ரேலை விட பத்து மடங்கு அதிகம். ஆனால் இது இராணுவ பலத்தின் அடிப்படையில் நாட்டை பலப்படுத்தாது.
ஈரான்
ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் அதிக முதலீடு செய்துள்ளது. அந்த நாட்டிடம் ஏராளமான ஆயுதங்கள் உள்ளன.
அந்த ஆயுதங்கள் ஈரானில் இருந்து ஏமனில் உள்ள ஹூதிகளுக்கும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவுக்கும் செல்கிறது.
இருப்பினும், நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளிலும், போர் விமானங்களிலும் ஈரான் பின்தங்கியுள்ளது. இந்தப் பிரிவில் வளர்ச்சியைத் தொடர ஈரானுக்கு ரஷ்யா உதவுவதாகத் தெரிகிறது.
உக்ரைனுடனான ரஷ்யாவின் போரை ஈரான் மறைமுகமாக ஆதரிக்கிறது. அந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட ஷாஹித் ட்ரோன்கள் பெரும்பாலும் ரஷ்யர்களால் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது ரஷ்யா அந்த ஆளில்லா விமானங்களை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல்
உலகிலேயே மிகவும் மேம்பட்ட வான் பாதுகாப்பை இஸ்ரேல் கொண்டுள்ளது.
IISS இராணுவக் கணக்கீடுகளின்படி, இஸ்ரேலுக்கு 14 Squadron விமானங்கள் உள்ளன. இதில் F15, F16 மற்றும் F-35 ஜெட் விமானங்களும் அடங்கும்.
எதிராளியின் இருப்பிடத்தை ஊடுருவி துல்லியமாக தாக்குதல்களை நடத்துவது இஸ்ரேலுக்கு கைவந்த கலையாக தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Iran vs Israel Military Power, Iran Israel Cold War, Iran Israel War, Iran Israel Conflict, Iran Israel News