ஈரான் போரால் ஆசியா, அவுஸ்திரேலியாவில் மின்சார வாகன தேவை அதிகரிப்பு
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய போரின் தாக்கம் உலகளாவிய எரிபொருள் விலைகளில் பெரும் உயர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களின் செலவுகள் அதிகரித்து, பல நாடுகளில் மின்சார வாகனங்களுக்கான தேவை வேகமாக உயர்ந்து வருகிறது.
அவுஸ்திரேலியாவில், பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களின் விலை 10-20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
விற்பனையாளர்களும், “ஒரே நாளில் பல டெஸ்லா கார்கள் விற்கப்படுகின்றன” என தெரிவித்துள்ளனர்.

வியட்நாமில் VinFast நிறுவனம் கடந்த மாதம் மட்டும் 127 சதவீதம் விற்பனை உயர்வை பதிவு செய்துள்ளது.
சீனாவில் மின்சார வாகனங்களின் விற்பனை 82 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 82,000 யூனிட்கள் அதிக விற்பனை நடந்துள்ளன.
ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், நோர்வே போன்ற நாடுகளிலும் மின்சார வாகன பதிவு மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
அவுஸ்திரேலிய அரசு, பிராந்தியங்களில் EV சார்ஜிங் நிலையங்களை அமைக்க 71 மில்லியன் டொலர் திட்டத்தை அறிவித்துள்ளது. அதேசமயம், வரி சலுகைகள் குறைக்கப்படலாம் என்ற அச்சமும் உள்ளது.
“புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சியால், அவுஸ்திரேலியா மின்சார வாகன மாற்றத்தில் முன்னிலை வகிக்க முடியும்” என அவுஸ்திரேலிய மின்சார வாகன சங்கம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், பொதுமக்களும் “ஒரு முழு சார்ஜ் செய்தால் வீட்டில் 6.60 டொலர் செலவில் முடிகிறது” என கூறி, எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்படாமல் சுதந்திரமாக பயணம் செய்யும் அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |