எதிரி நாடாக கருதப்படும் - அமெரிக்காவின் பொருளாதார போர் தொடர்பில் ஈரான் எச்சரிக்கை
Iran warns nations on US economic war: அமெரிக்காவின் பொருளாதார போரில் இணையும் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா, ஈரானை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சியில் தனது கூட்டாளிகளை அழைத்துள்ள நிலையில், ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மொஹ்சன் ரெசாய், “அமெரிக்கா நடத்தும் பொருளாதார போரில் எந்த நாடும் கலந்து கொண்டால், அது எங்களின் எதிரி நாடாக கருதப்படும்” என்று அரசுத் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
நிறுவனங்களை தாக்கப்படும்
அவர் மேலும், “அமெரிக்கா எங்கள்மீது பொருளாதார தடைகள் விதிக்க முயன்றால், அவர்களின் எண்ணெய் மற்றும் பொருளாதார நிறுவனங்களை தாக்குவோம். இதுவரை நாங்கள் அமெரிக்க இராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்துள்ளோம். ஆனால், பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால், எங்கள் பதில் நிலநடுக்கம் போல இருக்கும்” என்று எச்சரித்தார்.
இந்த எச்சரிக்கை, அமெரிக்கா தனது கூட்டாளிகளை ஈரானின் பொருளாதாரத்தை தனிமைப்படுத்தும் முயற்சியில் இணைக்க அழைத்துள்ள சூழலில் வந்துள்ளது.
குறிப்பாக, சீனாவிடம் அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது. ஆனால், சீனா இந்த முயற்சியை விமர்சித்து, “தடைகள் மத்திய கிழக்கு பிரச்சினையை தீர்க்காது” என்று தெரிவித்துள்ளது.
ஈரானின் முக்கிய வர்த்தக கூட்டாளியான ஐக்கிய அரபு அமீரகம், கடந்த வாரம் ஈரானுடன் உள்ள அனைத்து வர்த்தக மற்றும் நிதி பரிவர்த்தனைகளையும் நிறுத்துவதாக அறிவித்தது.
இந்த நிலைமை, அமெரிக்கா-ஈரான் உறவுகளை மேலும் மோசமாக்குவதோடு, உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |