வடக்கு இஸ்ரேல் மக்கள் வெளியேற வேண்டும் - ஈரான் எச்சரிக்கை
பெய்ரூட் தாக்கப்பட்டால் வடக்கு இஸ்ரேல் மக்கள் வெளியேற வேண்டும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குண்டு வீசுவதாக
பெய்ரூட் மற்றும் லெபனான் தலைநகரில் உள்ள தாஹியே மாவட்டத்தின் மீது குண்டு வீசுவதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அச்சுறுத்தியுள்ளதாக ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும், பெய்ரூட் மற்றும் அதன் தெற்கு புறநகர்ப் பகுதிகள் மீதான தாக்குதல்களை விரிவுபடுத்துவதாக இஸ்ரேல் விடுத்த அச்சுறுத்தல்களை செயல்படுத்தினால், அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு வடக்கு இஸ்ரேல் மக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இஸ்ரேலின் அச்சுறுத்தல் செயல்படுத்தப்பட்டால், பாதிப்பை தவிர்க்க விரும்பினால் வெளியேறுமாறு இராணுவக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |