இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்த மிரட்டல்: ஹிஸ்புல்லா-நெதன்யாகு உடன் டிரம்ப் பேச்சுவார்த்தை
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள புதிய பதற்றம் மற்றும் ராஜதந்திர முன்னேற்றம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் பதற்றம்
மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், லெபனான் தலைநகரான பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் லெபனானின் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் மிகப்பெரிய பதிலடி தாக்குதல் கொடுக்கப்படும் என்று ஈரான் பகீரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
பதிலடி தாக்குதலின் பாதிப்புகளை தவிர்க்க வடக்கு இஸ்ரேல் மக்கள் உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையைல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலையிட்டின் பேரில் இஸ்ரேல் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா படையினர் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இருதரப்புடனும் பேச்சுவார்த்தை
மத்திய கிழக்கில் உருவாகி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து இருதரப்பு தலைமையிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பாக டிரம்ப் தன்னுடைய சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பெய்ரூட்டிற்கு இஸ்ரேலிய படைகளை அனுப்ப போவதில்லை என்றும், ஏற்கனவே அனுப்பப்பட்ட படைகளும் திரும்ப அழைக்கப்பட்டு இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
அதே நேரத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், அதுவும் பயனுள்ளதாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையின் இறுதியில், இஸ்ரேல் - பெய்ரூட் மீதும், ஹிஸ்புல்லா - இஸ்ரேல் மீதும் எந்தவொரு தாக்குதலும் நடத்தாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |