ஈரான் இனி மிஞ்சாது... தொடர் குண்டுவீச்சை அடுத்து ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை

Donald Trump Iran Middle East
By Arbin Jun 28, 2026 05:09 AM GMT
Report

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற மற்றொரு எண்ணெய் கப்பலை ஈரான் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், சனிக்கிழமையன்று தொடர்ந்து இரண்டாவது இரவாக ஈரான் எல்லைக்குள் பல இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

முறியும் நிலை

ஈரான போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தை செயல்முறையில் புதிய பதற்றத்தை ஏற்படுத்துவதும், ஏற்கனவே பலவீனமாக உள்ள போர்நிறுத்தத்தை முறியும் நிலைக்குத் தள்ளுவதுமாக இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளது.

ஈரான் இனி மிஞ்சாது... தொடர் குண்டுவீச்சை அடுத்து ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை | Iran Wont Exist Trump Warns

ஹார்முஸ் நீரிணைக்கு அருகே சுமார் 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற பனாமா கொடி ஏந்திய 'கிகு' (KIKU) என்ற எண்ணெய் கப்பலை ஈரான் தாக்கி சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், சமீபத்திய பதிலடி நடவடிக்கையானது கண்காணிப்பு உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு அமைப்புகள், வான் பாதுகாப்புத் தளங்கள், ட்ரோன் சேமிப்பு நிலையங்கள் மற்றும் கண்ணிவெடி அமைக்கும் திறன் உள்ளிட்ட 10 ஈரானிய இலக்குகளைக் குறிவைத்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அத்துடன் 38 நொடிகள் கொண்ட ஒரு காணொளியையும் அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கா அளித்த பதிலடிக்குப் பிறகு, போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து நடப்பதற்கான வாய்ப்பு ஈரானுக்கு வழங்கப்பட்டிருந்தது என்றும்,

ஜேர்மனியில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களுக்கு வலியுறுத்தல்

ஜேர்மனியில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களுக்கு வலியுறுத்தல்

ஆனால் இன்று காலை 'Kiku' கப்பலைத் தாக்கியதன் மூலம் ஈரான் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டது என்றும் அமெரிக்க ராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற சரக்குக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, ஈரான் வசம் இருந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்புக் கிடங்குகள், கடற்கரை ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா வெள்ளிக்கிழமையன்றும் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், அமெரிக்கா மீண்டும் போரைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், ஈரான் இனிமேலும் மிஞ்சாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் இனி மிஞ்சாது... தொடர் குண்டுவீச்சை அடுத்து ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை | Iran Wont Exist Trump Warns

எதிர்காலம் தனி விடயம்

இதுவரையான நெருக்கடிகளில் இருந்து ஈரான் ஒருபோதும் பாடம் கற்றுக்கொள்ளாமல் போகவே அதிக வாய்ப்புள்ளது என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதனிடையே, மறுபுறம், வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்காவின் தளங்கள் அனைத்தும் வரும் நாட்களில் நரகத்தைச் சந்திக்க நேரிடும் என்று ஈரான் அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

IRGC தளபதி ஒருவர் தெரிவிக்கையில், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் உள்ள சிரிக் (Sirik) அருகே அமெரிக்கா மேற்கொள்ளும் கண்மூடித்தனமான தாக்குதல்கள், அந்த நீரிணை மீதான எங்களது கட்டுப்பாட்டிற்குரிய மர்மத்தை விடுவிப்பதில்லை; ஆனால், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நாங்கள் நடத்தும் தாக்குதல்கள், நீரிணை வழியாகச் செல்வதற்கான விதிமுறைகளை மற்ற கப்பல்களுக்கு நினைவூட்டும் என்றார்.

ஈரான் இனி மிஞ்சாது... தொடர் குண்டுவீச்சை அடுத்து ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை | Iran Wont Exist Trump Warns

அத்துடன், இப்பகுதியில் எஞ்சியுள்ள அமெரிக்கத் தளங்களின் எதிர்காலம் ஒரு தனி விடயம். வரும் நாட்களில் அவை பெரும் சேதத்தை அனுபவிக்கும் என்றார்.

ஈரான் போரில் ஏற்பட்டுள்ள சமீபத்திய தீவிரம் மத்திய கிழக்கை மீண்டும் கொந்தளிப்பாக்கியுள்ளது. ஈரானியப் பிரதேசம் மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் குவைத் மற்றும் பஹ்ரைன் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US