நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த பிரபல நாட்டு கடற்படைக் கப்பல்!
பாரசீக வளைகுட கடலில் ஈரானி கடற்படைக் கப்பல் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓமான் வளைகுடாவில் அமைந்துள்ள ஈரானிய துறைமுகமான ஜாஸ்க் அருகே ஈரானி கடற்படைக் சொந்தமான கப்பல் தீ பற்றி எரிந்துள்ளது.
கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கடற்படை அறிக்கையை மேற்கோளிட்டு FARS செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
தீ பற்றி எரிந்த கப்பல் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
எனினும், எப்படி தீ பிடித்தது என்பது குறித்த தகவல்கள் ஏதும் தற்போது வரை தெரியவில்லை, சம்பவம் குறித்து கடற்படை விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.