ஈரானிய எண்ணெய் விவகாரம்... இந்தியர் மீது நடவடிக்கை எடுத்த ட்ரம்ப் நிர்வாகம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செயல்படும் இந்திய தொழிலதிபர் மீது அமெரிக்கா நடவடிக்கை முன்னெடுத்துள்ளதுடன், அவரது கப்பல் மீதும் தடை விதித்துள்ளது.
நான்கு கப்பல்களுக்கு தடை
இந்தியரான ஜக்விந்தர் சிங் பிரார் என்பவருக்கு கிட்டத்தட்ட 30 கப்பல்களைக் கொண்ட பல கப்பல் நிறுவனங்கள் சொந்தமாக உள்ளது. இதில் பெரும்பாலான கப்பல்கள் ஈரானின் ரகசிய எண்ணெய் ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஐக்கிய அமீரகம் மட்டுமின்றி, இந்தியாவிலும் கப்பல் நிறுவனம் ஒன்றை அவர் நடத்தி வருவதுடன் பெட்ரோ கெமிக்கல் விற்பனை நிறுவனம் ஒன்றையும் செயல்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்க அரசாங்கத்தின் OFAC அமைப்பு ஜக்விந்தர் சிங் பிராரின் நான்கு கப்பல்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த கப்பல்கள் ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
மட்டுமின்றி, ஈராக், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் ஆபத்தான முறையில் கடலில் வைத்தே ஈரானிய எண்ணெய் விநியோகம் முன்னெடுத்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பல மில்லியன் டொலர்
மேலும், பிரார் போன்ற நபர்களை மற்றும் நிறுவனங்களை பயன்படுத்தி ஈரான் எண்ணெய் வியாபாரம் செய்து வருவதுடன், பொருளாதார நிலைமைகளையும் மேம்படுத்தி வருகிறது.
சுமார் 30 எண்ணெய் கப்பல்களை சொந்தமாக கொண்டுள்ள பிரார் ஹவுதிகளுடனும் தொடர்பில் இருந்துள்ளார் என ஆமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், ஈரானிய பெட்ரோலியத்தை எடுத்துச் சென்றதாக அறியப்படும் பிராரின் பல கப்பல்கள், இந்தியாவில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு முனையங்களுக்கு அடிக்கடி சென்று வந்ததையும் அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2024ல் மட்டும் பல மில்லியன் டொலர் ஒப்பந்தங்களை பிரார் பெற்றுள்ளார். தற்போது பிரார் மீதும் அவரது நான்கு கப்பல்கள் மீது அமெரிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்கத் தடைகளை மீறுவது அமெரிக்க மற்றும் வெளிநாட்டு நபர்கள் மீது சிவில் அல்லது குற்றவியல் தண்டனைகளை விதிக்க வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |