ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி! தலைவர்கள் இரங்கல்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் என ஈரான் அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் விபத்து
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு மந்திரி ஆகியோரை ஏற்றிச் சென்ற பெல் 212 ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை கடுமையான மூடுபனியில் அஜர்பைஜான் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் வழியாக பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.
Another picture showing what’s left of president Raisi’s helicopter after it crashed into the mountain. https://t.co/wRHbXrjqOY pic.twitter.com/TwJ5ODXsky
— Ali Hashem علي هاشم (@alihashem_tv) May 20, 2024
இந்த பயணத்தின் போது ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உடன் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மலேக் ரஹ்மதி ஆகியோரும் பயணித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஈரான் அரசு ஊடகம், ஜனாதிபதி ரைசியின் ஹெலிகாப்டர் மலை உச்சியில் விழுந்து நொறுங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
வெளியான உறுதிப்படுத்தப்பட்ட செய்தி
இந்நிலையில், ஹெலிகாப்டரில் இருந்த ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அனைவரும் இறந்துவிட்டதாக ஈரானிய அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஈரான் அரசியலில் பழமைவாத மற்றும் கடுமையான பிரிவுகளை பிரதிநிதித்துவம் செய்யும் 63 வயதான ஈரான் ஜனாதிபதி அயதுல்லா இப்ராஹிம் ரைசி இறப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
BREAKING: Iranian President Raisi, foreign minister confirmed dead in helicopter crash: state media https://t.co/biuithn5Sa
— Fox News (@FoxNews) May 20, 2024
இதனை தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி உட்பட பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் ஈரான் ஜனாதிபதி அயதுல்லா இப்ராஹிம் ரைசியின் உயிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், வியட்நாம் போரில் பரவலாக பயன்படுத்தப்பட்ட UH-1N "ட்வின் ஹியூ" இன் சிவிலியன் பதிப்பாகும். இது உலகளவில் அரசாங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |