கத்தார் இராணுவத்தின் துரித நடவடிக்கை... ஈரான் குண்டுவீச்சில் இருந்து தப்பிய 10,000 அமெரிக்க வீரர்கள்
மத்திய கிழக்கில் 10,000 வீரர்களைக் கொண்ட அமெரிக்கத் தளத்தை ஈரானியப் போர் விமானங்கள் தாக்குவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்னர், சமயோசிதமாக செயல்பட்ட கத்தார் போர் விமானங்களால் பெரும் நெருக்கடி தவிர்க்கப்பட்டுள்ளது.
10,000 வீரர்கள்
கத்தார் போர் விமானங்கள் ஈரானிய விமானங்களைத் தாக்கி வீழ்த்தியதாகவே தகவல் வெளியாகியுள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில், திங்கட்கிழமை காலை அல்-உதெய்த் விமானத் தளம் மற்றும் முக்கிய இயற்கை எரிவாயு பதப்படுத்தும் நிலையமான ராஸ் லஃபானையும் நோக்கி இரண்டு சோவியத் கால Su-24 தந்திரோபாய குண்டுவீச்சு விமானங்கள் நெருங்கின.

மத்திய கிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க தளமாகும் இந்த அல்-உதெய்த் தளம். இது வழக்கமாக 10,000 வீரர்களைக் கொண்டுள்ளது, மேலும் இது அமெரிக்க மத்திய கட்டளை, அமெரிக்க விமானப்படையின் மத்திய கட்டளை மற்றும் RAF இன் 83வது பயண விமானக் குழுவிற்கும் தலைமையகமாகும்.
குறித்த தளத்தை இலக்கு வைத்து ஈரானிய விமானங்கள் நெருங்க, ரேடாரில் சிக்காமல் இருக்க வெறும் 80 அடி உயரத்தில் பறந்தது. கத்தார் இராணுவம் அந்த விமானங்களைத் தொடர்பு கொண்டும் பதில் இல்லை.
இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட கத்தார் இராணுவம், F-15 போர் விமானங்களை அனுப்பி ஈரானின் Su-24 குண்டு வீச்சு விமானங்களை வீழ்த்தியுள்ளது. இதனால், 10,000 அமெரிக்க வீரர்களுடன் மிகப்பெரிய இராணுவ முகாமும் தப்பியுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து, அமெரிக்காவும் ஈரானை ஆறாவது நாளாகத் தாக்கி வருகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்காவிற்கு நிதி ஆதாரமாக இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளை ஈரான் தாக்கி வருகிறது.
ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகும் நாடுகள் அனைத்திலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் இராணுவ முகாம்கள் அமைந்துள்ளது.
50 மில்லியன்
ஈரானுக்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ள வளைகுடா நாடுகளுக்கு உரிமை உண்டு என்பதை மீண்டும் வலியுறுத்தும் அதே வேளையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலும் இன்று அழைப்பு விடுத்தன.
இஸ்ரேல் காரணமாக மத்திய கிழக்கில் வெடித்துள்ள இந்தப் போர், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கிய துறைமுகங்களுக்கான அணுகலைத் தடுத்துள்ளது, இதனால் வேளாண் பொருட்களின் இறக்குமதியை அதிகம் நம்பியுள்ள ஒரு பிராந்தியத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கப்பல் கண்காணிப்பு தளம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள துறைமுகங்களுக்குச் செல்லும் கொள்கலன் கப்பல்கள் தற்போது நெருங்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றன.
இதனால், 90 சதவீதத்திற்கும் அதிகமான உணவை இறக்குமதி செய்யும் வளைகுடாவில் உள்ள 50 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் விவசாய விநியோகங்களை பாதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |