தந்தையை விட அணு ஆயுதங்களில் அதிக ஆர்வம் காட்டும் கமேனி
தற்போதைய ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி, அவரது தந்தை அயத்துல்லா அலி கமேனியை விட அணு ஆயுதங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார் என அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலி கமேனி, 36 ஆண்டுகள் ஈரானை ஆட்சி செய்தவர். அவர், நாட்டின் அணுசக்தி திட்டத்தை முன்னெடுத்த போதிலும் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு எதிராக இருந்தார்.
ஆனால், பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
அவரது மகன் மொஜ்தபா கமேனி, பொதுவாக அணு ஆயுதங்களை ஆதரிப்பதாக வெளிப்படையாக கூறவில்லை. இருப்பினும், அவரும் புதிய கடுமையான ஈரான் அரசாங்கமும் அணு ஆயுதங்களை உருவாக்க விரும்புவதாக அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஈரான் அரசு தற்போது ஹார்முஸ் நீரிணையை கடுமையாகக் கட்டுப்படுத்தி வருகிறது. மேலும், அமெரிக்காவுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் கடினமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
அமெரிக்க அதிகாரிகள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் போர், ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதை தொடரும் வாய்ப்பை குறைப்பதற்கு பதிலாக, அதனை மேலும் அதிகமாக்கி இருப்பதாக என எச்சரிக்கின்றனர்.
இது உண்மையாக இருந்தால், இது அமெரிக்கா ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை அதிகரிக்க கூடுதல் காரணமாக அமையும்.
தற்போது, ஈரான் தனது அணு திட்டத்தை மீண்டும் தொடங்கவில்லை. ஆனால், அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு, தங்களின் அணு சொத்துக்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சில சென்ட்ரிஃப்யூஜ்களை மத்திய ஈரானில் உள்ள வலுவான நிலத்தடி வளாகத்திற்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |