அமெரிக்க படைகள் தங்கியிருந்த முக்கிய இராணுவ தளம் மீது ராக்கெட் ராக்குதல்!
ஈராக்கில் அமெரிக்க மற்றும் சர்வதேச படைகள் தங்கியிருக்கும் இராணுவ தளம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கின் Ain al-Asad இராணுவ தளம் மீதே இந்த ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படை உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் இந்த தாக்குதலில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
ராக்கெட் தாக்குதல் திங்கட்கிழமை மதியம் 1.35 மணியளவில் நடந்ததாகவும், தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்க தலைமையிலான சர்வதேச இராணுவ கூட்டப்படையின் செய்தித்தொடர்பாளர் அமெரிக்க இராணுவ தளபதி Wayne Marotto ட்விட்டரில் பதிவிட்டார்.
ஈராக்கில் தங்கள் படைகளை குறிவைத்து நடத்தப்படும் ரா்ககெட் தாக்குதலுக்கு ஈரான் ஆதவுப்பெற்ற ஹவுத்தி போராளிகள் தான் காரணம் என அமெரிக்க குற்றம்சாட்டி வருகிறது.
ஆனால், திங்கட்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.