வயதான தம்பதியிடம் ரூ.22,300 அபராதம் வசூலித்த IRCTC.., நீதிமன்றம் எடுத்த முடிவு
வயதான தம்பதியினர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக கூறி அபராதம் வசூலித்ததற்கு நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியள்ளது.
ரூ.22,300 அபராதம்
கடந்த ஆண்டு மார்ச் 21 -ம் திகதி, அலோக் குமார் என்பவர் தன்னுடைய பெற்றோருக்கு AC கோச்சில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். ஆனால், அவரது பெற்றோர் ரயில் பயணத்தின் போது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக கூறி ரூ.22,300 அபராதம் வசூலித்துள்ளனர்.
இதனிடையே, தம்பதியினரின் ரயில் டிக்கெட்டை வாங்கி PNR என்னை பரிசோதித்த டிக்கெட் பரிசோதகர், உங்களுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
நீதிமன்றம் உத்தரவு
இதனால், தம்பதியினரின் மகன் அலோக் குமார் IRCTC குறித்து இணையதளத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அவருக்கு IRCTC தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் முறையாக வராததால் அவர் பெங்களூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு நீதிமன்றம், "வயதான தம்பதியிடம் கடுமையாக நடந்துக்கொண்டதற்கு இழப்பீடாக ரூ.30,000 அபராதமும், ஏற்கனவே அவர்களிடம் வசூல் செய்த அபராதமும் திருப்பி செலுத்த வேண்டும்" என்று IRCTC -க்கு உத்தரவிட்டது. மேலும், வழக்காடிய செலவுக்காக அலோக் குமாருக்கு ரூ.10,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |