அயர்லாந்தில் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆண், பெண் சடலம்: கார்டா தொழில்நுட்ப பணியகம் ஆய்வு
Ireland Man and Woman Found Dead in Residence: அயர்லாந்தில் வீடு ஒன்றில் ஆண், பெண் இருவரின் சடலம் மீட்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தில் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆண், பெண் சடலம்
அயர்லாந்தின் விக்கிளோ கவுண்டி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இரண்டு மனித உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை காலை 8.00 மணிக்கு டப்ளின் நகருக்கு தெற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரே நகரின் ஓல்ட் கோனாட் அவென்யூ பகுதிக்கு அருகில் வீடு ஒன்றில் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால மீட்பு படையினர், 30 வயது ஆண் மற்றும் 40 வயதுடைய பெண் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.
சம்பவ இடத்தில் தடயவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கார்டா தொழில்நுட்ப பணியகம் வீட்டை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.