ஐரோப்பியர்களுக்கு மட்டும் அனுமதி.. பிரித்தானியர்களை ஓரடங்கட்டிய பிரபல அண்டை நாடு! வெளியான முக்கிய அறிவிப்பு
இந்தியா மாறுபாடு காரணமாக பிரித்தானியா பயணிகளுக்கான 14 தனிமைப்படுத்தல் தொடரும் என அயர்லாந்து அறிவித்துள்ளது.
அயர்லாந்து அமைச்சர் Leo Varadkar கூறியதாவது, பிரித்தானியாவுடனான வழக்கமான போக்குவரத்தை மறுபடியும் தொடங்கும் நிலையில் அயர்லாந்து இல்லை.
ஆனால், ஐரோப்பிய ஒன்றிய பயணிகளுக்கு எங்கள் எல்லை மீண்டும் திறக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
வெள்ளிக்கிழமை முதல் பிரித்தானியா மீதான கட்டுப்பாடுகளை அயர்லாந்து நீக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தேசிய பொது சுகாதார அவசரக் குழுவின் (Nphet) ஆலோசனைக்கு பின்னர், Leo Varadkar இந்த நடவடிக்கைகை ஒத்திவைத்திருக்கிறார்.
Nphet வழங்கிய ஆலோசனையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், பிரித்தானியாவில் இந்திய மாறுபாட்டின் பரவல் குறித்து கவலைகள் உள்ளன.
இப்போது பிரித்தானயாவில் அதிகம் பரவுவது இந்தியா மாறுபாடு தான், 50% க்கும் மேற்பட்ட தொற்றுகள் இந்த B1617 மாறுபாடாகத் தோன்றுகின்றன.
இந்த காரணத்திற்காக, அயர்லாந்து பிரித்தானியாவுடன் பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் நிலையில் இல்லை என Leo Varadkar கூறினார்.
இந்திய மாறுபாடு குறித்த கவலைகள் காரணமாக பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகியவை இந்த வாரம் பிரித்தானியாவுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.