உடனே வெளியேறுக... 15 அமெரிக்க நிறுவனங்களுக்கு குறிவைத்த ஈரானின் IRGC
மத்திய கிழக்கு முழுவதும் உள்ள சுமார் 15 அமெரிக்க நிறுவனங்களைக் குறிவைக்கப்போவதாக ஈரானின் IRGC மிரட்டியுள்ளதுடன், ஊழியர்களை அந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்கத் தொழிலகங்கள்
ஈரான் மீதான போர் மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து வரும் நிலையில், அந்த இரு நாடுகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் ஆபத்திற்குள்ளாகக்கூடும் என்று IRGC எச்சரித்துள்ளது.

IRGC வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், மத்திய கிழக்கில் அமைந்துள்ள அனைத்து அமெரிக்கத் தொழிலகங்களையும் காலி செய்யுமாறு அமெரிக்க நிர்வாகத்தை நாங்கள் எச்சரிக்கிறோம்.
அமெரிக்கர்கள் பங்குதாரர்களாக உள்ள தொழிற்சாலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள், எவ்விதத் தீங்கிற்கும் ஆளாகாமல் இருக்க, அப்பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், ExxonMobil, Boeing, Microsoft, Lockheed Martin மற்றும் Amazon ஆகிட நிறுவனங்களின் பெயர்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, டொனால்ட் ட்ரம்பின் மத்திய கிழக்கிற்கான தூதர் Steve Witkoff ஈரான் அதிகாரிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தொடர்பு கொண்டுள்ள நிலையிலேயே IRGC படைகளின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

ஈரான் தற்போது தயாரல்ல
ஏற்கனவே எவ்விதப் பேச்சுவார்த்தைகளுக்கும் ஈரான் தற்போது தயாரல்ல என அதிகாரிகள் தரப்பு அறிவித்துள்ளனர். மேலும், அமெரிக்கா தரப்பில் இருந்து அல்லது Steve Witkoff உடன் எவ்வித உரையாடலும் நடக்கவில்லை என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் வெளிப்படையாக மறுத்துள்ளார்.
இதனிடையே, ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் உதவ முன்வர வேண்டும் என ஐரோப்பிய நாடுகளுக்கு டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிப்போயிருப்பதால், போர் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்று திங்களன்று ட்ரம்ப் கருத்து தெரிவித்தார்; இருப்பினும், இந்தப் போர் ஆண்டின் பெரும்பகுதிக்கு நீடிக்கக்கூடும் என்று சிலர் எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |