பிரித்தானியர்களை மோசமாக விமர்சித்த அயர்லாந்துப் பெண்ணுக்கு அபராதம்
இங்கிலாந்தில் வாழும் அயர்லாந்துப்பெண்ணொருவர், பிரித்தானியர்களை மோசமாக விமர்சித்ததற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்துப் பெண்ணுக்கு அபராதம்
அயர்லாந்தைப் பொருத்தவரை, ஒரு கோட்டுக்கு அந்தப் பக்கம் வட அயர்லாந்து, இந்தப் பக்கம் அயர்லாந்துக் குடியரசு என்னும் நிலைதான் காணப்படுகிறது.
ஆனால், இருதரப்புக்கும் பல விடயங்களில் வித்தியாசமான கருத்துக்கள் காணப்படுகின்றன.

அதுவும், ஒரே நிலப்பரப்பாக இருந்தாலும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டதால், அயர்லாந்தைக் கடந்து மக்களும் பொருட்களும் வட அயர்லாந்துக்குள் செல்வதே பிரச்சினைக்குரிய விடயமாக உள்ளது.
நிலப்பரப்பில்தான் இப்படி என்றால், மக்கள் மனதிலும் அப்படி ஒரு எல்லைக்கோடு உள்ளதோ என சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் எண்ண வைத்துள்ளது.
இங்கிலாந்தின் மேற்கு சசெக்ஸில் வாழ்ந்துவரும் Cait O’Halloran (40) என்னும் அயர்லாந்து நாட்டுப் பெண், ஜனவரி மாதம் ஹொட்டல் ஒன்றில் தங்கச் சென்றுள்ளார்.
அப்போது அவர் நடந்துகொண்ட விதத்தால், அங்கு பொலிசார் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆம், பிரித்தானியர்களை மோசமான வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்துள்ளார் அவர். அத்துடன், பிரித்தானியர்கள் அனைவரும் சாகவேண்டும், நரகத்துக்குச் செல்லவேண்டும் என்றெல்லாம் கூறியதுடன் கெட்ட வார்த்தைகளால் ஹொட்டல் ஊழியர்களை திட்டியும் உள்ளார் அவர்.
அவருக்கு நீதிமன்றம் 614 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது. அத்துடன் இழப்பீடாக அவர் 331 பவுண்டுகள் செலுத்தவும் Warrington மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |