அண்ணாமலையை முதல்வராக்கினால் ஏற்றுக்கொள்ள முடியுமா? கூட்டணி முறிவுக்கு புது விளக்கம்
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் கூட்டணி முறிவு ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் புதிய விளக்கம் அளித்துள்ளார்.
தலைவர்களை பற்றி பேசிய அண்ணாமலை
தமிழக மாவட்டம், ஈரோடு அந்தியூர் அருகே குருவரெட்டியூரில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அங்கு கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், பவானி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கருப்பணன், "பாஜக, அதிமுகவுடன் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று அனுசரித்து சென்றோம். முதலாளியாக இருந்தாலும் ஓரளவுக்கு தான் இறங்கி செல்ல முடியும்.
அண்ணாமலை என்னைவிட 20 வயது சின்ன பையன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணாவை பற்றி அண்ணாமலை மோசமாக பேசினார். இப்படி பேசினால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்" என்றார்.
அண்ணாமலையை முதல்வராக்க கோரிக்கை
மேலும் பேசிய அவர், "2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பிரதமராக வேண்டும், 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதல்வராக்க வேண்டுமாம். இதை யாராவது ஏற்றுக் கொள்வார்களா, எத்தனை பூத்களில் அவருக்கு ஆள்கள் இருப்பார்கள்.
ஒரு பூத்தில் 5 பேர் இருக்க கூடிய தலைவரை, 2 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சியிடம் கோரிக்கை வைத்தால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இதனால் தான் கூட்டணி துண்டிக்கப்பட்டது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |