வீட்டின் பிரதான நுழைவாயிலில் உங்கள் பெயரை எழுதுவது சரியா?
வாஸ்து தோஷம் உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை கொண்டு வருகிறது.
வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருப்பதன் முதல் அறிகுறி பண இழப்பு. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அல்லது நோய்களும் வாஸ்து குறைபாடுகளைக் குறிக்கின்றன.
வீட்டில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பலன்கள் வாஸ்து சாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
வீட்டின் பிரதான நுழைவாயிலில் உங்கள் பெயரை எழுதுவது நல்லது என்று நினைக்கின்றீர்களா?
வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டின் பிரதான கதவில் உங்கள் பெயரை எழுதுவது சரியானதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்று விரிவாக பார்க்கலாம்.
வீட்டின் நுழைவாயிலில் உங்கள் பெயரை ஏன் எழுதக்கூடாது?
நேர்மறை சக்தியும் எதிர்மறை சக்தியும் வீட்டை சுற்றி சுற்றி வருவதாக வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அத்தகைய சூழ்நிலையில், நம் பெயரை எழுதும் போது, வீட்டிற்குள் நுழையும் எதிர்மறை ஆற்றல் நிச்சயமாக உங்களை தொந்தரவு செய்யும் என கூறப்படுகிறது.
வீட்டிற்கு வெளியில் பெயர் எழுதி பலகை தொங்கவிடுவது வாஸ்து தோஷங்களை அதிகரிக்கும் என்றும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் ஏதேனும் ஒரு கிரகம் இருக்கும். வீட்டிற்கு வெளியே இருக்கும் இடம் பாவ கிரகமாக கருதப்படும் ராகு கிரகமாகும்.
அந்த இடத்தில் நீங்கள் ஒருவரின் பெயரை எழுதி தொங்க விட்டால், அந்த பெயரைக் கொண்ட நபருக்கு ராகு நிச்சயமாக எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவார் என கூறப்படுகிறது.
வீட்டிற்கு வெளியே பெயர் பலகையை மாட்டி வைக்க விரும்பினால் உங்கள் சொந்த பெயருடன் தொங்கவிடாமல், வீட்டிற்கு ஒரு பெயரை வைத்து அதை எழுதலாம் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |