ஆதார் கார்ட்டை அப்டேட் செய்ய மொபைலுக்கு லிங்க் வருகிறதா? உஷாராக இருங்கள்
ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என்று லிங்க் அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதை பற்றிய தகவலை பார்க்கலாம்.
சைபர் குற்றங்கள்
அண்மைக் காலங்களின் சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வங்கி கணக்கு, ஆதார் கார்டு, பான் கார்டு சார்ந்து தான் பல குற்றங்கள் அதிகரிக்கின்றன. அதாவது, உங்களுடைய மொபைல் எண்ணிற்கோ, வாட்ஸ் அப் மூலமாகவோ லிங்கை அனுப்பி, தனிப்பட்ட விவரங்களை உள்ளிடுமாறு கூறப்படுகிறது.
இந்த வகையான மோசடிகள் ஆபத்துகள் நிறைந்தவை. அதனால் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். உங்களது முக்கிய தகவல்களை உள்ளிடுவது மூலம் பண மோசடி மற்றும் பிற வகையான மோசடிகளை சந்திக்க நேரிடும்.
அந்தவகையில், சமீப காலமாக ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என இ-மெயில் அல்லது வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றனர். அப்போது, நாம் என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.
ஆதார் மோசடி
உங்களுக்கு ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என இ-மெயில் வருகிறது என்றால் கவனமுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த மெயில்கள் ஆபத்தானவை. அந்த லிங்கில் சென்று நீங்கள் அப்டேட் செய்ய முயலும் போது தனிப்பட்ட தகவலை உள்ளிட நேரிடும். இது மோசடிகளாக கூட இருக்கலாம்.
அதற்கு நீங்கள் myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று அப்டேட் செய்து கொள்ளலாம். இல்லையென்றால் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.
ஆவணங்களை பகிர வேண்டாம்
இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் கார்டை அப்டேட் செய்ய மெயில் மூலமாகவோ, வாட்ஸ் அப் மூலமாகவோ தகவல் கொடுப்பதில்லை. மேலும், அடையாளச் சான்று (POI), முகவரிச் சான்று (POA) ஆகியவற்றை பகிருமாறும் கூறுவதில்லை.
எனவே, ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என இ-மெயில் வருகிறது என்றால் அதனை நீங்கள் தவிர்ப்பது நல்லது.
என்ன செய்ய வேண்டும்?
உங்களது ஆதார் குறித்த அப்டேட்டை நீங்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே செய்தால் பொதும். அதுவும் கட்டாயமில்லை.
இது போன்ற லிங்குகளை நம்பி ஏமாற வேண்டாம். மொபைல் எண், வீட்டு முகவரி போன்ற தகவலை புதுப்பிப்பதற்கு எப்போது வேண்டுமானாலும் அப்டேட் செய்து கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |