பூமிக்கு வந்த வேற்றுகிரகவாசிகள்? தென் அமெரிக்காவில் உள்ள மர்ம ஓடுதளம்
பூமியில் வேற்றுகிரகவாசிகள் உள்ளார்களா என்பது குறித்து விவாதம் நீண்டகாலமாகவே உள்ளது.
சமீபத்தில், அமெரிக்கா வசம் உள்ள ஏலியன்கள், பறக்கும் தட்டுகள் உள்ளிட்டவை குறித்த அனைத்து ரகசிய ஆவணங்களையும் பொதுவெளியில் வெளியிட சம்மந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.
மனிதர்கள் பூமியில் இருந்து மற்றொரு கிரகமான நிலவிற்கு சென்றது போல், ஏன் அண்டவெளியில் உள்ள கோடிக்கணக்கான கிரகங்களில் இருந்து வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்திருக்க முடியாது?
அப்படி வேற்றுக்கிரவாசிகள் வந்து சென்றதற்கான ஆதாரங்களும் பூமியில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தென் அமெரிக்காவில் உள்ள மர்ம ஓடுதளம்
தென் அமெரிக்கா நாடான பெருவில் உள்ள நாசுகா பாலைவனத்தில் சுமார் 80 கிமீ பரப்பளவில் ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தளத்தை அகழ்வாராச்சி செய்ய யாரையும் அரசு அனுமதிப்பதில்லை.

ஏராளமான கோடுகள், வரைபடங்கள், எண் கணித கணக்கீடுகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ள அந்த தளத்தை ஆகாயத்தில் இருந்து மட்டுமே பார்வையிட முடியும்.
அந்த தளத்தில் 23 கிமீ நீளம் கொண்ட சீரான விமானத்தளம் போன்ற ஓடுபாதை ஒன்று காணப்படுகிறது.
அந்த மலைப்பகுதிகளில் வானில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய வகையில் சில ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. எண்கள், விலங்குகள், மனிதர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வரைபடங்கள் அதில் உள்ளது.

இந்த வரைபடங்கள் ஒவ்வொன்றும் சுமார் ஒரு கால்பந்து மைதானம் அளவிற்கு பெரிய பரப்பளவை உடையது. வரையப்பட்ட இந்த கோடுகளில் கிறிஸ்டலின் கிளாஸ் துகள்கள் கலந்து காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தரைவழியில் அணுக முடியாத, கடினமான நிலப்பரப்பை உடைய இந்த மலைப்பகுதியில் 80 கிமீ பரப்பளவில் இந்த தளத்தை உருவாக்கியது யார்? ஏன் உருவாக்கினர்?
வானில் இருந்து இதனை பார்க்கும் போது விமானதளம் போன்று காட்சி தருவதாக விமானிகள் கருதுகின்றனர். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் போக்குவரத்திற்கு மாட்டுவண்டி மற்றும் குதிரைகளை பயன்படுத்திய போது விமானத்தளம் யாருக்கு தேவைப்பட்டது?
இந்த தளத்தை அமைப்பதற்கு பூமியில் அவர்கள் பெருவை தேர்ந்தெடுத்தது ஏன் என்பது குறித்து உண்மையின் தரிசனம் நிகழ்வில் நீரஜ் டேவிட் விரிவாக பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |